திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கொள்ளுமேடு சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம்
நடைபெற்றது.
வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் மக்கள் திட்ட முதல் இயக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் ஜல் ஜீவன் இயக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பிசியோதெரபி மையம் கூடிய விரைவில் அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.
இந்த கூட்டத்தில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் எம்.சதீஷ்குமார் ஒன்றிய கவுன்சிலர் ஜி.தயாநிதி ஊராட்சி மன்ற செயலர் ஜெ.நாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.