அரியலூர்,டிச;20
அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் திமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று 19 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து செந்துறை அம்பேத்கர் சிலை முன்பு செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அமைச்சரே பதவி விலகு பதவி விலகு மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள் என்று கோஷம் எழுப்பிய படி திமுக கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது.
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதிப்புச்செய்த பாஜக தலைவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரியும், இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க கோரி இன்று மதியம் 1மணி
அளவில் செந்துறையில் விசிக மாநில துணைச் செயலாளர் கருப்புசாமி தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர் கே.சி.குபேந்திரன் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற போது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்