ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே உள்ள 3 உயர் மின் அழுத்த கம்பங்களை அகற்றி ரூ. 29 லட்சம் செலவில் புதிய தொழில்நுட்பத்தில் ஆர் எம் யூ என்ற கருவியின் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு இயந்திரத்தின் செயல்பாட்டை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் எம் பி க்கள் அந்தியூர் செல்வராஜ் பிரகாஷ் வி. சி சந்திரகுமார் எம் எல் ஏ மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலை செல்வி செயற்பொறியாளர் நகரியம் சண்முகசுந்தரம் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட பொருளாளர் பி கே பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.