சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் சரி செய்யும் பணி நடைபெற்றது இதில் அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் சந்தை கடை அருகில் நடைபெற்ற வேலை மட்டும் முடிவுறாமல் உள்ளது.
சுமார் 25 அடி நீளமுள்ள இந்த பாதையில் 10 அடி பாதை மட்டுமே பயன் பாட்டில் உள்ளது.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது மேலும்
சாக்கடையில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவு நீர் பாலம் 5 அடிக்கு மூடாமல் உள்ளது.இதனால் விபத்துகள் மற்றும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் மீதமுள்ள பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்