பரமக்குடி, ஏப்.11: பரமக்குடி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என சட்டசபையில் திமுக எம்எல்ஏ முருகேசன் கோரிக்கை வைத்தார்.
தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் நடைபெற்ற மானிய கோரிக்கையில் ,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் “பரமக்குடி நகராட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக கவுன்சிலர்களைக் கொண்ட நகராட்சியாக உள்ளது.இந்த நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பரமக்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு ” நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கு போதுமான மக்கள் தொகை இருக்க வேண்டும். திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு போதுமான மக்கள் தொகை இருக்குமானால் பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ,பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சாலை, பாலங்கள், சுகாதார மையங்கள் நகராட்சி பள்ளி கட்டிடங்கள், வாரச்சந்தை உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
படம்
பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும் என பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் சட்டசபையில் பேசினார்.