தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், அரூர் மற்றும் காரிமங்கலம் வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி அருரில் உள்ள இ. ஆர். கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது.
பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கீழ் மூன்று நாட்கள் தொழில் முனைவர் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கிக் கடன் பெறுவது எப்படி?, தொழில் தொடங்கும் முறைகள், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது போன்ற முக்கிய தலைப்புகளில் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை மாவட்ட திட்டக்குழுவின் மாவட்ட திட்ட அலுவலர்
கருணாநிதி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்ஆரூர் ஆகியோர்கள் இணைந்து பயிற்சியினை ஆய்வுசெய்தனர். மேலும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தருமபுரி மாவட்ட திட்ட மேலாளர் இன்ஜினியர் கௌதம், சண்முகம் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். சிவபாரத் ,கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட மேலாளர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட திட்ட அலுவலக புள்ளியியல் அலுவலர் உஷா ஆகியோர் இதில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்கள். மேலும் பயிற்சியாளர் அரிஹரசுதன் Hifi11 Technologies நிறுவனர் மற்றும் சிவபாரத் மாவட்ட திட்ட மேலாளர் கிருஷ்ணகிரி இணைந்து பயிற்சியளித்தார்கள்.
இந்த பயிற்சி மூலம் பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்ந்து சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் பயனடைவது குறிப்பிடத்தக்கது.