வேலூர்=17
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வள்ளிமலை ஊராட்சியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வி உமா, கால்நடைத்துறை இணை இயக்குநர் மரு. கோபி கிருஷ்ணன், உதவி இயக்குநர் மரு. அந்துவன், விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.