மதுரை ஆகஸ்ட் 28,
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளிகாப்பான் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அரசு துறைகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடியாக பரிசீலனை செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை ஆகியோர் உடன் உள்ளனர்