சவுதி அரேபியா, நவ.5-
தமிழ்நாட்டின் சார்பாக தமிழர்களின் “தமிழ் வாழ்க”* என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்* ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டைப் போல், இந்த வருடமும் சவுதி அரேபியா இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த புலம்பெயர்ந்த இந்திய மாநிலங்களின் கலாச்சார விழா இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.
“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” என்பதை மெய்பிக்கும் விதமாக “தமிழ் வாழ்க” என்ற கருவை மையமாக கொண்டு, தமிகத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றும் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் உட்புற அரங்க மேடையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை தமிழர்களின் பாரம்பரியத்தை இலக்கியச் செழுமையை தமிழர்களின் விருந்தோம்பலை பறைசாற்றும் வகையில் பல்வேறு பாரம்பரிய உணவுகள், தமிகத்தின் சின்னங்கள், தமிழகத்தின் கல்வி தொழில் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சியை விளக்கும் பதாதைகள், அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் உள்ளிட்டவைகள் வெளிபுற அரங்கில் காட்சி பொருட்களாக வைத்து, தமிழகத்தின் வலிமையையும், மகிமையையும் அனைத்து மாநில மக்களுக்கும் வியக்கும் வகையில் சீரும், சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இச்சிறப்பு நிகழ்வை இந்திய தூதரக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குழுவில் தமிழர்களின் பிரநிதிகளாக உள்ள இம்தியாஸ் அஹமது மற்றும் முஹைதீன் சலிம் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து, அனைவரும் மகிழ்ச்சி பொங்க, நிகழ்ச்சியை வெற்றிபெற வித்திட்டார்கள் என்றால் மிகையாகாது.
ஒரு நிகழ்வு வெற்றி பெற விருந்தோம்பல் என்பது முக்கியமானது. இந்த நிகழ்வில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் விருந்தோம்பல் பொறுப்பை பெற்றுக் கொண்டு, ஏற்றுக் கொண்ட பொறுப்பை போட்டி போட்டு கொண்டு, தமிழகத்தின் சிறப்புகளை காண வருகைபுரிந்து இருந்த இந்திய தூதரக அதிகாரிகளையும், தமிழ்நாடு மற்றும் மற்ற நம் உற்ற மாநில விருந்தினர்களையும் இன்முகத்துடன் வரவேற்று, நம் பாரம்பரிய உணவுகள், திண்பண்டங்களை பரிமாறி, பரவசப்படுத்தினார்கள்.
“தமிழனென்று சொல்லடா, தலைநிமிந்து நில்லடா” என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்தும் பிரமிக்கும் வகையில் அமைந்து இருந்தது, தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளை ரியாத் தமிழ் உணவகங்களான தம்பிஸ், சோழா, பொன்னுசாமி, கிராண்ட் லக்கி உள்ளிட்ட உணவகங்களும் அமைப்புகளும் அள்ளிக் கொண்டு வந்து அரங்கை நிறைத்து விட்டதோடு விருந்தினர்களின் வயிற்றையும் போதும் போதும் என்றளவிற்கு நிறைத்து விட்டார்கள் .
இந்நிகழ்வில் அனைத்து தமிழ் அமைப்பின் பிரதிநிதிகள் தமாம் ஜித்தா தமிழ்ச்சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறக்க பல்வேறு வகையில் உழைத்தார்கள். மேலும் இந்தியன் வெல்போர் ஃபோரத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிகழ்ச்சியின் நிறைவு பெறும் வரை இருந்தார்கள்.
ஒட்டுமொத்த தமிழ் அமைப்புகளான ரியாத் தமிழ்ச் சங்கம், அயலகத் தமிழர்நலச்சங்கம், NARTIA RIA, காயிதே மில்லத் பேரவை, ஜேஎம்சி முன்னாள் மாணவர்கள் பேரவை, இந்திய தமிழ் நுண் கலை அமைப்பு, இந்திய தமிழ் சங்கம், குளோபல் தமிழ் சங்கம், எழுமின் சவூதி அமைப்பு, யுனிவர்சல் வெளிநாட்டு தமிழர்கள் நல சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்பு பிரதிநிதிகளின் கூட்டு முயற்சி மற்றும் சிறப்பான ஒருங்கிணைப்பால் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றது என்றால் மிகையில்லை. அதை வந்திருந்த அண்டை மாநிலத்து உறவுகளும் தூதரக அதிகாரிகளின் வார்த்தைகளும் உறுதிப்படுத்துவதாகவும். நம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் இருந்தது.
நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் இறுதிவரை இருந்து சரியாக இரவு 11:30 மணி அளவில் தேசிய கீதம் பாடலைப் பாடி மகிழ்ச்சியாக
மேலும் இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் இன்னும் மிகச் சிறப்பாக செம்மைப் படுத்தி, மேம்படுத்தி நடத்த வேண்டும் என்ற உறுதிமொழியுடன் அனைவரும் கலைந்து சென்றனர்.