கந்திலி :டிச:20, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரியனேரி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் தரப்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டார் இந்நிலையில் நரியனெரி ஊராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடுகள், தெரு சாலை மற்றும் அரசு நடுநிலை பள்ளி கழிப்பறைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதை குறித்து போன் செய்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு சென்று கோமாரி தடுப்பூசிகள் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அரசு நடுநிலைப் பள்ளியில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பொழுது
பள்ளியின் கழிவறை சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொழுது புதியதாக கட்டப்பட்ட கழிவரையின் மேல் சீலிங் சிதலமடைந்து பெயர்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதை கண்டு புதியதாக கட்டப்பட்ட கழிப்பறை ஏன் இப்படி உள்ளது என்று வட்டார வளர்ச்சி அலுவலரை கடிந்து கொண்டார்
பின்னர் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது தீ விபத்தை தடுக்கும் அனைப்பான் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அனைத்து துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு கரியம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சம்பந்தப்பட்ட மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக கற்றுக் கொண்டார். மனிதனை பெற்றுக்கொண்டு ஒவ்வொரு மனு மீதும் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு நேரடியாக மனு சம்பந்தமாக தெளிவுப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்