பரமக்குடி,நவ.29 : போகலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோகனூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக
மாநில இளைஞரணி செயலாளர், விளையாட்டு துறை அமைச்சர்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் எளியோர்களின் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கழக கொடி ஏற்றப்பட்டு, ஏழை எளியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன், மாவட்டத் தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் மஞ்சூர் தங்கராஜ், பரமக்குடி தொகுதி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அமைப்பாளர் துரைமுருகன், ஒன்றிய கழக துணைச் செயலாளர் தெய்வேந்திர நல்லூர் கலைச்செல்வி, மாவட்டக் கழகப் பிரிதிகள் மஞ்சக்கொல்லை தணிக்கோடி, அரியகுடிபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் பாண்டியன், ஒன்றிய கழக பொருளாளர் அரசடி வண்டல் ஜெகநாதன், பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், மஞ்சக்கொல்லை வன்னி செல்வன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மஞ்சூர் அசோக் குமார், வழக்கறிஞர் அணி பரமசிவம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம்,ஒன்றிய மாணவரணி செயலாளர் திருமுருகன் உள்ளிட்ட ஒன்றிய கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.