நாகர்கோவில் செப் 12
குமரி மாவட்டதில் தக்கலை, அழகியமண்டபம் பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4 மோட்டாா் சைக்கிள் போக்குவரத்து காவல்துறையால் பறிமுதல் . குமரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுவார்கள் மீதும், அபாயகரமாக வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவின் பேரில், தக்கலை துணைக் காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மேற்பாா்வையில், தினந்தோறும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் தற்கொலை மற்றும் அழகியமண்டபம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அதிக சத்தத்துடன்கூடிய சைலன்சா்களை மாட்டிய வாகனம் ஓட்டியது, பதிவு எண் இன்றி வாகனம் ஓடியது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4 மோட்டாா் சைக்கிள்களை தக்கலை போக்குவரத்து காவல்துறையினா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.