சென்னை , அக்டோபர்- 29, சென்னை வி.ஆர் மாலில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வழங்கும் இரு சக்கர வாகனங்களுக்கான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன் மேளா நடைபெற்றது.
வாடிக்கையாளர்களின் இரு சக்கர வாகனத்திற்கான கடன் பெறும் தகுதி நிலையை முன் கூட்டியே சரி பார்த்து உறுதி செய்வதன் மூலமாக கடன் பெறுவதை
எளிதாக்கிக் கொள்ளலாம்.
ஹுரோ, சுசூகி, டி.வி. எஸ், யமஹா மற்றும் ராயல் என்ஃபீல்டு போன்ற வாகனங்களுக்கு இந்த எக்ஸ்சேஞ்ச்” மற்றும் கடன் மேளா ஶ்ரீராம் பைனான்ஸ் உடன் இணைந்து இருக்கின்றன. இந்த பண்டிகைக் காலத்தின் போது இரு சக்கர வாகனம் வாங்க வேண்டுமென்ற தங்களது கனவை நிஜமாக்குவதை எளிதானதாகவும், பலரும் அணுகிப் பெறத்தக்கதாகவும் ஆக்குவதற்கான குறிக்கோளுடன் இந்த கடன் மேளா திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஶ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் செயலாக்க இயக்குநர் எலிசபெத் வெங்கட்ராமன் இந்நிகழ்வு குறித்து கூறியதாவது:-
“பண்டிகைக் காலத்தில்
புதிய வாகனங்களை ஏற்ற காலமாகும்.
புதிய வாகனத்தை வாங்குவதற்கான வாய்ப்பை ஶ்ரீராம் பைனான்ஸ் இந்த எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன் திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துகிறது.
இதனால் சென்னையிலும், தமிழ்நாட்டிலும் குடும்பங்கள் இந்த விழாக் காலத்தின் போது புதிய இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரவும் மற்றும் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடவும் சிறந்த வாய்ப்பை இது உறுதி செய்கிறது என்றார்.