வாணியம்பாடி:ஆக:30, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி வரலாற்று ஆய்வாளர் காணி நிலம் மு.முனிசாமி வாணியம்பாடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கோ.சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் அகழாய்வுச் செய்ய ஏற்ற இரண்டு இடங்களை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து முனைவர் க. மோகன் காந்தி கூறியதாவது: எங்களுடன் கள ஆய்வில் தொடர்ச்சியாக பயணிக்கும் சித்த வைத்தியர் சீனிவாசன் அவர்கள் தங்கள் இல்லத்தில் கிடைத்திருக்கக் கூடிய பொருட்களை எங்களிடம் காட்டினார் அவை ஏறத்தாழ ஆயிரத்தில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் புதையுண்ட பண்பாட்டு நாகரிகத்தின் அடிச்சு சுவடிகளாய் விளங்குகின்றன.
வாணியம்பாடி வட்டம் வடக்குப்பத்திற்கு அருகே உள்ள குட்டூர் கிராமத்தில் உள்ளது சித்த வைத்தியர் சீனிவாசனின் இல்லம் இந்த இல்லத்தின் அருகே உள்ள மண் பாங்கான பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வினை மேற்கொண்டோம். அப்போது கருப்பு, சிவப்பு,கருப்பு -சிவப்பு என பலவகை பட்ட பானை ஓடுகள் கிடைக்கின்றன. களிமண்ணால் செய்யப்பட்ட சுடுமண் குழாய்கள் பல உடைந்த நிலையில் கிடைத்தன. இவை இப்பகுதி சிறந்த நகர்புறமாக இருந்ததற்கான சான்றாக உள்ளன. குடிநீர் மற்றும் வீட்டில் இருக்கக்கூடிய கழிவு நீரை வெளியேற்ற உதவிய களிமண் குழாய்கள் இருந்திருக்க வேண்டும் இதுபோன்ற குழாய்கள் கீழடியிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நத்தை மேடு என்ற பகுதியில் ஏழு செம்பு காசுகள் கிடைத்துள்ளன. அவை தொல்லியியல் துறைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை-கீழடி நகரம் போன்றே வாணியம்பாடி வடக்கு பட்டு கிராமமும் சிறந்த ஒரு நகரமாக பண்டைய காலத்தில் விளங்கி இருக்க வேண்டும். சிறந்த நாகரீகங்கள் ஆற்றங்கரை ஓரத்தில் தோன்றுவது வரலாற்று உண்மை கீழடி நாகரிகம் வைகை ஆற்றங்கரையோரம் தோன்றியிருப்பது போல வாணியம்பாடி வடக்கு பட்டு நாகரீகம் பாலாற்றங்கரையில் தோன்றியுள்ளது ஏழாம் வடக்குப் பட்டியலில் இருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பாலாறு ஓடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த வடக்குப்பேட்டிலேயே சேகர் என்பவர் நிலத்திலும் யாராலும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் ஏராளமான அளவில் கிடைக்கின்றன. முழு மற்றும் உடைந்த நிலையில் பழங்கால செங்கற்களும் இந்நிலத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இரும்பை உருக்கி காய்ச்சதனால் உண்டாகும் இரும்பு கசடுகள் இரும்பு கிட்டங்கற்கள் ஏராளமாக கிடைக்கின்றன. இவை சங்க கால பொருட்களாய் இருக்க வாய்ப்புள்ளது. கீழடியில் நடக்கும் அகழாய்வை போன்று இந்த இரண்டு இடங்களிலும் ஆய்வுகள் நடத்தினால் தமிழரின் பாரம்பரிய ஆதாரங்கள் கிடைக்கும். மேலும் எங்களது ஆய்வுக் குழு அகழாய்வு செய்ய ஏற்ற இடங்களாக திருப்பத்தூருக்கு அருகே உள்ள அணேரி என்ற ஊரையும் ஜவ்வாது மலையில் உள்ள கல்லாவூரில் உள்ள கற்திட்டைக்குள்ளாக உள்ள பாணிகளையும் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.