வேலூர்_01
81 மதுபாக்கெட்டுகள் மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் பறிமுதல்!!
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரேத மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று (05.07.2024) குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்களின் தலைமையிலான போலீசார் கொண்டாசமுத்திரம் சந்திப்பு அருகே தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த குடியாத்தம் பகுதியே சேர்ந்த வெங்கடேசன் மகன் அண்ணாமலை (வயது-21) அதே பகுதியே சேர்ந்த ஆனந்தன் மகன் சரண்குமார் (வயது21) என்பவர்களை நிறுத்தி விசாரணை செய்த போது சட்டவிரோதமாக விற்பனைக்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார் 81 மதுபாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்