சென்னை,ஜூன்-09
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர்கள் இரண்டு புதுமையான மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்தார்கள். அவை மிகவும் வெற்றிகரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அது குறித்த கட்டுரைகள் பிரபல சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த இரண்டு மருத்துவ முறைகளும், எம்.எம்.எம். மருத்துவமனையில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மருத்துவ முறைகளின் சிறப்புகள் என்னவென்றால், இவை இரண்டுமே கடுமையான அறுவை சிகிச்சை முறை இல்லாமல் செய்யப்படுபவை. மேலும் இவற்றுக்கு நீண்டகால சிகிச்சையும் அவசியமில்லை.
கட்டமைப்பு ரீதியாக இதய அடைப்பு சிக்கல்கள் மற்றும் இதயத்தில் ஏற்படும் சிக்கலான துளைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாகவே இந்தப் புதிய சிகிச்சை முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சிகிச்சை முறைகளும், அவை தொடர்பான இந்தக் கட்டுரை, சர்குலேஷன் கார்டியோவாஸ்குலர் இன்டர்வென்ஷன்ஸ் என்ற இதழில் பிரசுரிக்கப்பட தேர்வாகியுள்ளது.
மேல் சைனஸ் வெனோசஸ் குறைபாடுகளில் மூடப்பட்ட உறைகுழாயை, வளைகுழாய் வாயிலாக நீக்கதல் சம்பந்தமான கட்டுரையை அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி, ஜூன் 2024 இதழில் பிரசுரமாகியுள்ளது.
மருத்துவமனையைச் சேர்ந்த ஆலோசகர் டாக்டர் வி. நந்தகுமார், கேத் லேப் தலைவரான டாக்டர் கே. லட்சுமணதாஸ், இதயவியல் துறை இயக்குநரான டாக்டர் அஜித் முல்லாசரிஆகியோர் அடங்கிய குழு, புதிய சிகிச்சை முறையை உருவாக்கியது.
இதயவியல் துறை இயக்குநரான டாக்டர் அஜித் முல்லாசரி கூறியதாவது, எம்.எம்.எம். உருவாக்கிய வழிமுறையில் இந்தப் பிரச்னைக்கு, நானும் எம்.எம்.எம். மருத்துவமனையைச் சேர்ந்த ஆலோசகர் டாக்டர் வி. நந்தகுமார், கேத் லேப் தலைவரான டாக்டர் கே. லட்சுமணதாஸ்,ஆகியோர் அடங்கிய குழு, புதிய சிகிச்சை முறையை உருவாக்கியது.