பூதப்பாண்டி – டிச-01-
பூதப்பாண்டியை அடுத்துள்ள தெள்ளாந்தி உடையடி பகுதியை சேர்ந்தவர் சுதன் (26) இவர் கடந்த செவ்வாய்கிழமை கடுக் கரை விலக்கு பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும் போது அதை கானவில்லை அது போல் அழகிய பாண்டியபுரம் இளங் கடை பகுதியை சேர்ந்த சிவ வேலன் (37) என்பவர் எட்டாம டை பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று விட்டு திரும்ப வந்து பார்க்கும் போது அதையும் காணவில்லை இது குறித்தும் இவர்கள் இருவரும் தனித்தனியாக பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள் புகாரின் அடிப்படையில் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து காணாமல் போன பைக்குகளையும் அதை திருடியவர்களையும் தேடி வருகிறார்கள்.