கலசலிங்கம் கல்வி குழுமம் லிங்கா குளோபல் பள்ளி மாநில அளவில் இரண்டு விருதுகள் பெற்று சாதனை ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளியில்
தரமான கல்வி, புதுமையாக கற்பித்தல் மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளி தமிழ்நாட்டின் சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பெங்களுர், பகின்அப் வென்டர்ஸ் இண்டியா. நிறுவனம் ”இந்தியா எலைட் கல்வி மற்றும் கல்வி நிறுவன சிறப்பு விருதுகள் – 24 மாநாட்டு விழாவில், ”தமிழ்நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான சிபிஎஸ்சி பள்ளி – 2024” என்ற விருதையும்” ”கல்வித் தரங்களில் சிறந்து விளங்குதல் மற்றும் செயல்படுத்துதல்” ஆகிய இரு விருதுகளையும் வழங்கியுள்ளது.
விருதுகளை பள்ளி முதல்வர் முனைவர் அல்கா சர்மா பெற்றுக் கொண்டார்.
விருதுகள் பெறக் காராணமான பள்ளி முதல்வர், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களையும் பள்ளித் தலைவர் முனைவர் கே. ஸ்ரீதரன், செயலாளர் டாக்டர் எஸ். அறிவழகி, இயக்குநர்கள் முனைவர் எஸ். சசி ஆனந்த், எஸ். அர்ஜுன் கலசலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.