சுசீந்திரம்.டிச.10
சுசீந்திரம் அருகே உள்ள சின்னணைந்தான் விளைபகுதியில் உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தெரிய வந்தது இதனை அடுத்து சுசீந்திரம் காவல் உதவி ஆய்வாளர் அனுஜன் தலைமையில் போலீசார் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தார் அப்போது சின்னணைந்தான் விளை பகுதியில் உள்ள டீக்கடைஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்தனர் கடையில் இருந்த 15 பாக்கெட் புகையிலையினை கைப்பற்றி கடை உரிமையாளர் ஜெயகுமார் 54 கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அது போல சின்னணைந்தான்விளை பகுதியில் உள்ள மற்றொரு கடையில் 6 பாக்கெட் புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி அதன் உரிமையாளர் ராஜேந்திரன் 68 என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்