தூத்துக்குடி
மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு : 25 பெண் ஊழியர்கள் பாதிப்பு!
தூத்துக்குடியில் தனியார் மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு வெளியேறியதால் 25க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது நிலா சீ புட்ஸ் என்ற தனியார் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அந்த ஆலையில் அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில் அங்கு பணியில் இருந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகள மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து நிலா சீ புட் நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையான ஏவிஎம் மருத்துவமனை மற்றும் ராஜேஷ் திலக் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் தனியார் மீன் பதன ஆலையில் அமோனியா கேஸ் வெளியாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 25க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.