மதுரை டிசம்பர் 10,
மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை மேலூர் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை பாரதப் பிரதமர் மோடி ஜி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷான் ரெட்டி அவர்களிடமும் பரிந்துரை கடிதம் நமது மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்ததின் பேரில் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்யும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை உடனடியாக கை விடுவோம் என உறுதி அளித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்த நமது மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்துவதற்காக செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருட கிருஷ்ணன் சந்தோஷ் சுப்பிரமணியன் பொருளாளர் நவீன் வழக்கறிஞர் பிரிவு ஐயப்ப ராஜா, சீதா மார்க்கெட் கண்ணன் விஷ்வா ஊடக பிரிவு வேல் பாண்டியன் வட மலையான் இளைஞரணி அருண் ஒரே நாடு ஹரி கிருஷ்ணன் மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்