தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காசநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம் பகவத், தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் பெரிய சாமி , தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சிவகுமார், துணை கண்காணிப்பாளர் மரு.பத்ம நாதன்,உறைவிடம் மருத்துவர் சைல்ட்ஸ் ஜெயமணி , துணை உறைவிடம் மருத்துவர் மரு.கரோலின், மருத்துவர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics