குளச்சல், டிச- 3
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜகிரிஷ் மனைவி ஸ்ரீஜா (48). இவர் வக்கீலாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் பணியில் உள்ளார். இவரது பெற்றோர்கள் வீடு புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் உள்ளது. நேற்று மாலை 6:30 மணி அளவில் இவர் அம்சி செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மண்டைக்காடு புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் பைக்கில் வேகமாக வந்தவர்கள் திடீரென ஸ்ரீஜாவின் கழுத்தில் கடந்த தங்க செயினை பறிக்க முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஸ்ரீஜா கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்த போது அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீஜா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து மண்டக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.