சிவகங்கை செப்:25
சிவகங்கை நகரில் நேரு பஜார் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்றனர்.
இதில் தலைவராக கணபதிராமன் உறுப்பினர்களாக சங்கீதா கார்த்திகேயராஜன், கணேசன் மகேந்திரன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்து பொறுப் பேற்றுக் கொண்டனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிந்துரையின் பேரில் நகர்க்கழக செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான சி.எம்.துரை ஆனந்த் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினருமான ஜெயமூர்த்தி மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அறங்காவலர் ஒமேகா திலகவதி கண்ணன் அறநிலையத் துறை துணை ஆணையர் சங்கர் செயல் அலுவலர் கோ.நாராயணி ஆய்வாளர் சுகன்யா அலுவலர் செல்லப்பாண்டி ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
பொறுப்பேற்ற நிர்வாகிகள் அனைவரும் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் பெரியகருப்பன் மற்றும் சேகர்பாபு ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.