ஜன:22
ஜெய்வாபாய் மாதிரி நகரவை மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் பா வர்ஷிகா மாணவி ஜார்கண்ட் மாநிலத்தில் ரஞ்சியில் நடைபெற்ற தடகள போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 12.20 செகண்டில் முதலிடம் பிடித்து திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த அந்த மாணவியை பள்ளியின் கலையரங்க திடலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் வெற்றி பெற்ற கோப்பையை வழங்கி சிறப்புரையாற்றி சிறப்பித்தார். உடன் தலைமையாசிரியை அ. ஸ்டெல்லா அமலோற்பவ மேரி. மாவட்டத் துணைச் செயலாளர் டிஜிட்டல் சேகர். பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன். உசேன். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சலீம் பாய்.மாநகர துணைச் செயலாளர் மகாலட்சுமி. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி. கல்விக் குழு தலைவர் கவுன்சிலர் திவாகரன். எல்பி எஃப் மாவட்ட தலைவர் பி எஸ் பாண்டியன். முன்னாள் கவுன்சிலர் கீதா.தெற்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்த். பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திருமதி மு. முருகேஸ்வரி.வி மோகனசுந்தரி.திருமதி கே.லாவண்யா. தடகள பயிற்சியாளர் எஸ் சுரேஷ் ராஜ். மற்றும் கழக நிர்வாகிகள். ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.