திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக புத்தாண்டு, பொங்கல் மற்றும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் பிறந்தநாள், மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநரும், சிறப்பு பேச்சாளருமான Rtn.PDG.S.ராஜேந்திரன் கலந்து கொண்டு அரும்பியதும், விரும்பியதும் என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்.அதனை தொடர்ந்து மேற்கு ரோட்டரி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் பிறந்தநாள், மணநாள் கொண்டாடிய சங்க உறுப்பினர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் கொண்டாடும் விதமாக பழனி இரட்டையர்கள் விக்னேஷ் மற்றும் முருகேஷ் இணைந்து கரோக்கி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணைத் ஆளுநர் Rtn. M.செல்வகனி உட்பட மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn. P.சந்திரசேகரன்
நன்றி கூறினார்.