தருமபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் கூட்ட அரங்கில் நடந்தது.
மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் வரவேற்பு தெரிவித்தார் கன்னியப்பன் செயலாளர் அறிக்கை வாசித்தார். வேடியப்பன் பொருளாளர் அறிக்கை வாசித்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சிவக்குமார் மாநில அமைப்பாளர் சரவணன் மாநிலத் துணைத் தலைவர் அசோக் மாநில இணைச்செயலாளர் மூர்த்தி மண்டல செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் சிவக்குமார் மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் நலம் திட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார் விரைவில் மாநில அளவில் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்தாருக்கு 3 லட்சம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களுக்கு டைரி காலண்டர் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது சங்க உறுப்பினர்களுக்கு கண் பரிசோதனை பல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் ரத்ததான முகாமும் நடந்தது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர் முடிவில் அசோகன் நன்றி தெரிவித்தர்.