தஞ்சாவூர் ஜூலை 19.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா நடை பெற்றது.
தமிழக அரசின் பொது நூலகத் துறை வாசகர் வட்டம் சார்பில் திருக்குறள் மணி பொறி தொடக்க விழா தன்னலமற்ற மக்கள் நல பணி ஆற்றி வரும் மருத்துவர்களுக்கு பி.சி. ராய் விருது வழங்கும் விழா ,காமராஜர் பிறந்த நாள் விழா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் டாக்டர் வி வரதராஜன் தலைமை வகித்தார்.திருக்குறள் மணி பொறியை தஞ்சாவூர் சட்டப் பேரவை உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் தொடங்கி வைத்தார் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் சண். ராமநாதன் பரிசுகள் வழங்கினார். தன்னலமற்ற மக்கள் நல பணியாற்றி வரும் மருத்துவர்கள் மோகன் தாஸ், மருது துரை, பராந்தகன், ராதிகா மைக்கேல், அமுதவடிவு, சுபாஷ் காந்தி ஆகியோர்களுக்கு டாக்டர் பி.சி. ராய் விருதுகளை தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி வழங்கி, பாராட்டினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி,மாவட்ட நூலக அலுவலர் முத்து,மாவட்ட நூலக வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவர் நல்லாசிரியர் அறிவானந்தம் செயலர் புண்ணிய மூர்த்தி சதய விழா குழு தலைவர் செல்வம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவிகளின் கலா நிகழ்ச்சி நடைபெற்றது.