சேலம்,செப்.07
சேலம் கோட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா,கலைத் திருவிழாவின் பரிசளிப்பு விழா,விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் நாசர் கான் என்கின்ற அமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது திராவிட கழகம் ஆட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் பல்வேறு வசதிகள் செய்து தருகின்றன, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்,கேரம் போர்டு மாணவ செல்வங்கள் ஆர்வமாக விளையாடி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும், கேரம் போர்டு விளையாட்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று உலகக் கோப்பை காக மூன்று மாணவிகள் அமெரிக்கா செல்கின்றனர். அதேபோல் கேரம்போர்டு என்பது மூளைக்கு வேலை கொடுப்பது ஆகையால் மாணவ செல்வங்கள் நன்றாக படிக்க வேண்டும்.விளையாட்டில் அரசு பள்ளியை முதன்மை பள்ளியாக மாற்ற வேண்டும் மாணவர்கள் நீங்களும்,பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, உலக கோப்பையில் வெற்றி பெற முயல வேண்டும் என்று மாணவர்களுக்கு கேரம் போர்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை நளினி தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகம் பொருளாளர் நசீர் அகமது, மற்றும் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் தினேஷ் குமார், ஆசிரியை, ஆசிரியர்கள்,ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு சுமார் 90 நபர்களுக்கு கலைத் திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள்,மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாசர் கான் என்கிற அமான் பள்ளிக்கு மாணவர்களுக்காக கேரம் போர்டு மற்றும் விளையாட்டு உபகரணங்களை வாங்கி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.