நாகர்கோவில் அக் 21,
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் , சைபர் குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ்,கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம், PEW காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், DCRB காவல் துணை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஜோசப் , தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா, காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.