நாகர்கோவில் – அக்- 12,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின் எழுத்தாளருமான முரசொலி செல்வம் மறைவிற்க்கு கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் திருவுறுவ படத்திற்க்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான . வழக்கறிஞர் . ரெ. மகேஷ் அறிவுறுத்தலின் படி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டதிற்குட்பட்ட கழக அமைப்புகள் அனைத்து கொடிகம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்க்குட்பட்ட மாநில , மாவட்ட , மாநகர, ஒன்றிய , நகர, பகுதி , பேரூர், வட்ட , கிளை , கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , கழக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் , கழக தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.