தஞ்சாவூர். ஏப்.20.
தஞ்சாவூர் மாதாக் கோட்டை அருகே பெரம்பலுார்- திருச்சி நெடுஞ் சாலையில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெடுஞ்சாலைத்துறை ஆகியன இணைந்து மரம் நடும் விழாவினை சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நீதியரசர் என். செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
முதன்மை மாவட்ட நீதியரசர் கா.பூரண ஜெயஆனந்த் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் மாவட்ட வன அலுவலர் மா.ஆனந்குமார் , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜதுரை, தஞ்சாவூர் நெடுஞ்சா லைத்துறை கோட்டப்பொறியாளர் .செந்தில் குமார் மற்றும் பலர் உடன் உள்ளனர்.