வேலூர்_20
வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக இவர் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு பல லட்சங்களை குவித்ததாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால், வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசை அதிரடியாக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.