அரியலூர்,டிச;05
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குமிழியம் கிராமத்தில் மரங்களின் நண்பர்கள் இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் பொட்டக்கொல்லை தத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் அறிவியல் தொழிற்கல்வி மாணவர்களுக்கான பத்து நாள் பயிற்சியின் தொடர்ச்சியாக ஏழாவது நாள் நிகழ்ச்சியாக பள்ளி ஆசிரியர் சிவகுருநாதன் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராவணன் இயற்கை வாழ்வியல் நிபுணர் தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் பங்குபெற்று மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கினர். இயற்கை வேளாண்மையில் நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து இயற்கை வேளாண்மை பயிற்சியாளரும் விவசாயியுமான பச்சை மனிதன் தங்க சண்முக சுந்தரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் இது குறித்து பயிற்சியின் போது தங்க சண்முக சுந்தரம் கூறியதாவது வேளாண்மையின் அடிப்படையே மண்ணை அகல உழுவதை விட மழை நீர் உறிஞ்சும் அளவிற்கும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்குமான ஆழமாக உழுதல் என்ற முன்னோர்களின் கருத்தையும் வேளாண்மையில் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து முன்னோர்கள் சொன்ன காய்ச்சலும் பாய்ச்சலும் என்ற அடிப்படையான காய்ச்சலாக வயல்வெளியில் கோடை காலத்தில் வெடிப்பு ஏற்படுவதும் பின்னர் ஆழமாக உழுவதும் கோடையில் மழை பெய்யும் போது மழை நீர் உறிஞ்சிட வாய்ப்பு ஏற்படும் இதனால் காய்ந்து வெடிப்பு வெடித்த வயல்வெளிகளில் மழை நீர் உறிஞ்சப்படுவதால் வெள்ள நீர் வயல்வெளிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதனை உணர்ந்தே முன்னோர்கள் நீர் மேலாண்மை வேளாண்மைக்கு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்தனர் என்பதனையும் நினைவுபடுத்தினார். ஆனால் தற்போதைய உழவு முறைகளில் அதிகளவு எடை கொண்ட டிராக்டர் உள்ளிட்ட உழவு எந்திரங்களின் பயன்பாட்டினால் அரை அடி ஆழமான மண் பரப்பு மட்டுமே விவசாயத்திற்கு உதவும் என்றும் அதற்கு கீழ் உள்ள மண்ணை இறுக வைப்பது தான் நவீன கருவிகள் மற்றும் ரசாயன பயன்பாடு வேளாண்மை இதனாலேயே அதிகளவு மழை நீரை வயல்வெளிகளில் சேமிக்க வாய்ப்பிருந்தும் சேமிக்க இயலாமலும் நீர்நிலைகளிலும் சேமிக்க இயலாமலும் கடலில் அதிகளவு நீர் சென்று கலந்து ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவை தந்து வெள்ளத்தில் பொதுமக்கள் வேளாண் தொழிலும் முடங்கும் நிலை உருவாகிறது எனவும் இவற்றையெல்லாம் தவிர்க்க திடீர் புயல் திடீர் வெள்ளம் ஏற்படுவதனை தவிர்க்க இயற்கை வேளாண்மையை எதிர் வரும் தலைமுறையினரான மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும் என இயற்கை வாழ்வியலாளர் தங்க சண்முக சுந்தரம் இயற்கை வேளாண்மையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நீர்மேலாண்மை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்