தஞ்சாவூர் மே.29.
தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை கையாள்வது குறித்து பயிற்சி வகுப்பும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணியினை மேற் கொள்ள ஏதுவாக அலுவலர்களை நியமனம் செய்திட குலுக்கள் முறையிலான முதல் தேர்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது.
இப்பயிற்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிக
ளி ல் இருந்து நியமனம் செய்யப்பட உள்ள அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.