மதுரை செப்டம்பர் 7,
மதுரையில் போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்க தானியங்கியை தொடங்கி வைத்த கமிஷ்னர்
மதுரை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 32 தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக தானியங்கி சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. முடக்குச்சாலை சந்திப்பானது மதுரை மாநகரின் மேற்கு நுழைவுவாயிலின் முக்கிய பகுதியயின் ஒன்றாக திகழ்வதுடன் கேரள மாநிலம் தேனிமாவட்டத்தின் நெடுஞ்சாலையாகவும், மதுரை புறநகர் பகுதிகளிலிருந்து வாகனங்கள் நகருக்குள் வந்து செல்லும் முக்கியப்பகுதியாகவும், கன்னியாகுமரி ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் மூலமாக மதுரை மாநகருக்குள் வாகனங்கள் வந்துசெல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. மேலும் தேனி ரோடு, துவரிமான் ரோடு மற்றும் காளவாசல் சந்திப்பு ஆகிய சாலைகளை இணைக்கக்கூடிய முடக்குச்சாலை மும்முனை சந்திப்பில் தற்சமயம் ஏற்பட்டு வரும் வாகன போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலை குறைக்கவும், விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும், மேலும் அப்பகுதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை கண்காணிக்கவும் போக்குவரத்து தானியங்கி சிக்னல் மற்றும் நவீன காவல் உதவி மையமானது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன போக்குவரத்தினை சீர் செய்யவும், ஒலி பெருக்கி மூலம் விபத்து மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கவும், CCTV Camera -க்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கவும் உதவியாக இருக்கும் வகையில் இந்த தானியங்கி சிக்னல் காவல் உதவி மையம் அமைத்து அதில் மூன்று வண்ண LED strips சிக்னலில் ஏற்படும் வண்ணத்திற்கேற்ப சமிக்ஞைகள் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்படுள்ள சிறப்பம்சங்களுடன் போக்குவரத்து மேம்பாட்டு சாதனங்களை உள்ளடக்கிய நவீன போக்குவரத்து தானியங்கி சிக்னல் மற்றும் நவீன காவல் உதவி மையமானது அமைக்கப்பட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் J.லோகநாதன் உத்திரவுப்படி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு செயல் படுத்தப்படவுள்ளது. மேலும், மேற்கண்ட முடக்குச்சாலை சந்திப்பில் மதுரை மாநகர காவல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தும், நகருக்குள் அதிவேகமின்றி பயணம் செய்தும், விபத்துக்கள் ஏற்படாவண்ணம் வாகனங்களை இயக்கி விபத்தில்லா மாநகரினை உருவாக்கிடுமாறும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொண்டார்.