மதுரை டிசம்பர் 18,
மதுரை கோரிப்பாளையம்
AV மேம்பாலம் மற்றும் செல்லூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து காவல்துறை சார்பாக போக்குவரத்து மாற்றம் (Diversion) செய்யப்பட்ட பகுதிகளை மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் நேரில் பார்வையிட்டார். உடன் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா மற்றும் போக்குவரத்து திட்டமிடல் கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் மற்றும் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் DE மோகன காந்தி மற்றும் AD சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.