கன்னியாகுமரி மார்ச் 6
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது :-
மயிலாடி கூண்டு பாலத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை செப்பனிடும் பணி 7/3/2025 (வெள்ளி கிழமை) காலை முதல் ஒரு மாத காலம் நடைபெற இருப்பதால்
சுசீந்திரம், வழுக்கம்பாறை, மயிலாடி, வழியாக அஞ்சுகிராமம் செல்லும் அனைத்து வாகனங்களும் சுசீந்திரம் வழுக்கம்பாறை ஈத்தங்காடு, பொற்றையடி வழியாக கொட்டாரத்தில் இடது புறமாக திரும்பி பெரியவிளை வழியாக பால்குளம் பைபாஸ் ரோடு சென்று அஞ்சுகிராமம் செல்லவும்.
அஞ்சுகிராமத்திலிருந்து மயிலாடி, வழுக்கம் பாறை, வழியாக சுசீந்திரம் செல்லும் அனைத்து வாகனங்களும் புண்ணார்குளம் ஜங்ஷன் லிருந்து இடது பக்கமாக திரும்பி பொட்டல் குளம் ஜங்ஷன் வழியாக நேராகச் சென்று பெரியவிளை, பெருமாள் புரம், வழியாக கொட்டாரம் சென்று சுசீந்திரம் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல்
அரசு பேருந்துகள் சொல்ல வேண்டிய வழித்தடங்கள் குறித்து தெரிவித்திருப்பதாவது.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம், வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக
அஞ்சுகிராமம் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் சுசீந்திரம், வழுக்கம்பாறை, வழியாக மயிலாடி ஆராட்டு பாலத்திலிருந்து வலது புறமாக திரும்பி பொற்றையடி, கொட்டாரம், பெரியவிளை, பொட்டல் குளம் புண்ணார்குளம் வழியாக
அஞ்சு கிராமத்திற்கு செல்லும்.
அஞ்சு கிராமத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் புண்ணார்குளம் ஜங்ஷனிலிருந்து இடது புறமாக திரும்பி பொட்டல் குளம்,பெரிய விளை, பெருமாள் புரம், கொட்டாரம் வழியாக செல்லும்.
எனவே பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.