மதுரை மார்ச் 22,
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் உத்தரவின் பேரில்
மதுரை தெற்கு இரயில்வே சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு, பேருந்திலிருந்து இறங்கும் பொழுதும், சாலையை கடக்கும் பொழுதும், பொதுமக்களும், பாதசாரிகளும் மற்றும் பேருந்து பயணிகளும் எவ்வாறு பாதுகாப்பாக கடக்க வேண்டும் என்பது பற்றிய வழி முறைகளை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி போக்குவரத்து பாதுகாப்பை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் பேருந்தை ஒட்டி முன் பகுதியில் ஓட்டுனரின் கண்ணுக்கு புலப்படாத blind spot பகுதியில் கடக்க கூடாது இதனால் விபத்துக்கள் ஏற்படும், உயிரிழப்புகள் ஏற்படும் என்று அறிவுரை வழங்கினார்.