நாகர்கோவில் – ஜூலை – 17,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரம் – மேல கிருஷ்ணபுரம் செல்லும் சாலையோரம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோர வியாபாரிகள் அருகில் உள்ள கடற்க்கரை கிராமங்களில் இருந்து மீன்களை மொத்தமாக விலைக்கு வாங்கி வந்தும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைகின்ற காய்கறிகள் மற்றும் பயிர்களை வியாபாரத்திற்காக கொண்டு வந்தும், நகரில் முக்கியமான சந்தையான அப்டா மற்றும் வடசேரி கனகமூலம் போன்ற சந்தைகளில் இருந்து
வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பெருட்க்களை மொத்த விலைக்கு வாங்கி வந்து சில்லறை விற்ப்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடத்தை நம்பி சுமார் 500- க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெற்று வரும் நிலையில், நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு மாநகராட்சி அதிகாரிகள் மூலம் இந்த கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வந்த நிலையில் வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் வியாபாரிகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடையை அப்புறப்படுத்த முடியாது என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். எனவே வியாபாரிகளுடன் காவல் துறையினர் சுமூக பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் தற்காலிகமாக கடையினை மாற்றும் திட்டத்தினை அதிகாரிகள் கைவிட்டு , விட்டு அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.