புதுக்கோட்டை 16.
தமிழ்நாடு வணிக சங்கங்கள் பேரமைப்பின் 42 வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டம் மாவட்ட வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரமராஜா பொதுச் செயலாளர் கோவிந்தராஜ லு மற்றும் மாவட்ட வர்த்தக கழக தலைவர் சாகுல் ஹமீது செயலாளர் கதிரேசன் பொருளாளர் ராஜா முகமது முதன்மை துணை தலைவர் அசுரப் அலி துணைத் தலைவர் சவரிமுத்து இணைச் செயலாளர் ஆரோக்கியசாமி முன்னாள் தலைவர் சேவியர் மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிருபர்களிடம் பேசிய விக்ரமராஜா இந்த மாநாடு வணிகர் அதிகார பிரகடன மாநாடாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் தமிழக முதல்வரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கண்டிப்பாக தமிழக முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆன்லைன் கார்ப்பரேட் வர்த்தக நிறுவனங்களின் வரவினால் வணிகர்கள் சூறையாடப்பட்டு வருகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் வணிகர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் வணிகர் சங்க பேரமைப்பின் இளைஞரணி மகளிர் அணி கொடி ஆகியவை உருவாக்கப்பட்டு இருந்தாலும் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. இருப்பினும் மத்திய மாநில அரசுகளை உருவாக்கக்கூடிய இடத்தில் வணிகர்கள் உள்ளனர். அதனால் எங்களுடைய கோரிக்கைகளை அவர்கள் தான் நிறைவேற்ற வேண்டும்
என்று கூறினார்.