நாகர்கோவில், ஜூலை – 15,
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று மாலையிலும் குழித்துறை, முள்ளங்கினாவிளை, கோழிப்போர்விளை , தக்கலை பூதப்பாடி பகுதிகளில் சாரல் மழை பெய்தது மலையோர பகுதியான பாலுமோர் பகுதியிலும் பேச்சிப்பாரை பெருஞ்சாணி, அணைப்பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது குழித்துறையில் அதிகபட்சமாக 26.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது திற்பரப்பு பகுதியிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது அறிவியல் விதமா அளவு தண்ணீர் கொட்டி வருகிறது விடுமுறை தினமான நேற்று அறிவியில் குளிப்பதற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். குமரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் விடுமுறை தினமான நேற்று காலையிலிருந்தே கூட்டம் அலைமோதியது.