கன்னியாகுமரி, அக்.29-
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகை தருகிறார்கள் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து சுற்றுலாத்தலத்தை மகிழ்ச்சியோடு கண்டுகளித்துச் செல்ல சிறப்பான பணிகளை செய்வதற்காக அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சி தலைவர் அழகு மீனா ஆலோசனை நடத்தினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சத்தியமூர்த்தி, கோட்டாட்சியர் காளீஸ்வரி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர்.