திருப்பூர் ஆக.18
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோருக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது நாட்டின் 3 சதுப்பு நிலங்களை புதிதாக ராம்சர் தளங்களில் சேர்ந்துள்ளது அதில் திருப்பூர் நஞ்சராயன் குளத்தையும் இடம்பெற செய்த தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும்,மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த்குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க சார்பாக நிர்வாகிகள் பொன்னாடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி வட்டம் சர்கார் பெரியபாளையம் கிராமத்திலுள்ள நஞ்சராயன் குளம், நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், அமராவதி அணை திருமூர்த்திமலை அருவி, மற்றும் பிரசித்தி பெற்ற சிவன் மலை, திருமுருகன் பூண்டி, பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன், உள்ளிட்ட கோவில்களை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்குழு சங்க தலைவர் குலோபல் பூபதி, சுற்றுலா வளர்ச்சிக்குழு சங்க தலைவர் நாகராஜ், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம் தரப்பில் தலைவர் KAK. கிருஷ்ணசாமி, சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கம், ஓட்டல்கள், தங்கும் விடுதி, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம், இரயில்வே உட்பட சுமார் 20 க்கும் மேற்பட்ட சங்கங்கள், சுற்றுலாத்துறை சார்ந்த ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.