மார்த்தாண்டம், ஏப்-13
மார்த்தாண்டம் அருகே களியல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகள் தயா (28). இவர் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவருக்கும் அருமனை பகுதி சேர்ந்த சிவராஜ் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமண நடந்தது. இந்த நிலையில் தன்னை அதிக வரதட்சனை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் தயா வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில்:- திருமணத்தின்போது 11 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் வரதட்சனை கொடுத்ததாகவும், ஆனால் திருமணமான மூன்றாவது நாளில் கணவர் வீட்டில் பிரச்சனை ஏற்படுத்தி அதிக வரதட்சணை வேண்டும் என்று தொடர்ந்து கொடுமை படுத்தினர். என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டனர். எனவே எனது கணவர் சிவராஜ் அவர்கள் பெற்றோர் உள்ளிட்டவர்கள் மீது உள்ளவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்க மார்த்தாண்டம் போலீசருக்கு உத்தரவிட்டது. போலீசார் தயாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் சிவராஜ், மாமனார், மாமியார் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.