நாகர்கோவில் நவ 15,
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேற்று குமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் காவல் துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்து பரிசு தொகை வழங்கினார்.
பரிசுத்தொகை பெற்ற மாணவர்களின் மேற்படிப்பு விவரங்களை கேட்டரிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.