ராமநாதபுரத்தில் விக்டர் அகாடமி பள்ளி சார்பில் தொன் நடனம் மூலம்
கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி திரட்டல்
காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) முகம்மது இர்பானிடம் நிதியுதவி வழங்கினர்
ராமநாதபுரம், செப்.30-
ராமநாதபுரத்தில் விக்டர் அகாடமி பள்ளி சார்பில் தொன் நடனம் நிகழ்ச்சி கேன்சர் நோயால் பாதிக்கப்படும் சிறு குழந்தைகள் நலனுக்காக நிதி வழங்கும் பொருட்டு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விளையாட்டு மைதானம் அருகே நடைபெற்ற இந்த கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்கும் உதவிக்காக நிதி திரட்டும் தொன் நடனம் நிகழ்ச்சியை ராமநாதபுரம் விக்ட்டர் அகாடமி பள்ளியின் தாளாளர் ஜி.எம்.முரளி பள்ளி செயலாளர் மாலதி முரளி ஆகியோர் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து நேஷனல் அகாடமி பள்ளி ,செய்யது அம்மாள் பள்ளி, கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, முகம்மது தஸ்தகீர் பள்ளி மற்றும் விக்டர் அகாடமி பள்ளி மாணவர்கள் இணைந்து தனித்திறமை நடனம் மற்றும் கூட்டு நடனம் கூட்டு முயற்சிகளை சிறப்பாக செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் பெறப்பட்ட நிதி உதவியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ், உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) முகம்மது இர்பான் ஆகியோரிடம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.