

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று எட்டயபுரம் வட்டம் படர்ந்தபுளி உள்வட்டத்திற்குட்பட்ட படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், டி.தங்கம்மாள்புரம், இராமனூத்து, தலைக்காட்டுபுரம் மற்றும் சிங்கிலிபட்டி ஆகிய கிராமங்களுக்காளான 1433ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயத் (ஜமாபந்தி)தில் மாவட்ட ஆட்சித்தலைவரும் வருவாய்த் தீர்வாய அலுவலருமான கோ. லட்சுமிபதி, தலைமையேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.