கரூர் மாவட்டம் – அக்டோபர் – 26
கரூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் MLA தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து WJUT தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் கரூர் மாவட்டம் சார்பில்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து செய்தியாளர்களுக்கும் செய்தியாளர் அறை
வழங்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள் நிருபர்கள் ஒளிப்பதிவாளர்கள்
அரசு மானிய விலையில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு.
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்க எங்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு என்று மாவட்ட தலைவர் கோபிநாதன் தலைமையில்
மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் செல்வகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமரைக்கனி, கோபால், சதீஷ் மற்றும் உறுப்பினர்களுடன் இன்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது.