நாகர்கோவில் நவ 9
கன்னியாகுமரி வனக்கோட்டம், பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட பொத்தையடி பகுதியில் 21.03.2024 அன்று தனபால் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மிளா மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பாக தகவலறிந்ததும் வனத்துறை தானாக முன்வந்து விசாரணை செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10,00,000/- கன்னியாகுமரி வனக்கோட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 08.11.2024 அன்று உயிரிழந்த தனபாலின் மனைவி நிர்மலாவுக்கு ரூ.10,00,000/- ற்கான காசேலையானது மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளரால் வழங்கப்பட்டு அன்னாரது கணக்கில் பற்று வைக்கப்பட்டது.
மேலும் 2024 ஆம் ஆண்டில் மட்டும் வன உயிரினங்களால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளுக்கு தலா 10 லட்சம் வீதம் 30 லட்சமும், பயிர் சேதம் மற்றும் கால்நடைகள் சேதம் ஏற்பட்ட 14 விவசாயிகளுக்கு ரூ.2,93,483/- நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.